சின்னப் பிரச்னைதான் சரிசெய்துவிட்டோம் - ஹெலிகாப்டரை பழுதுபார்த்த ராகுல்காந்தி - வைரல் புகைப்படம்!

செய்திகள்
Updated May 11, 2019 | 08:22 IST | Times Now

ராகுல்காந்தி பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் குழுவுடன் இணைந்துச் செயல்பட வேண்டும் என்பது எல்லா கைகளும் இணைந்து செயல்படுவதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

rahulgandhi repaired helicopter
rahulgandhi repaired helicopter  |  Photo Credit: Instagram

பிரசாரத்துக்கு சென்றபோது ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பிரச்னையை தனது குழுவுடன் சேர்ந்து ராகுல்காந்தி சரிசெய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார். அந்தப்புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

17வது மக்களவைத் தேர்தல்  இந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, வரும் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிவுற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை  ஆறாம் கட்ட வாக்குப்பதிவுவும் 19-ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. 

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் வரும் மே19 அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதற்காக பிரசாரம் மேற்கொள்ள சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குழுவினருடன் இணைந்து பழுது பார்த்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப்புகைப்படத்தில் குழுவுடன் இணைந்துச் செயல்பட வேண்டும் என்பது எல்லா கைகளும் இணைந்து செயல்படுவதுதான். ஹிமாச்சல் பிரதேசத்தில் சென்றுகொண்டு இருக்கும்போது ஹெலிகாப்டரில் சிறிய கோளாறு ஏற்பட்டது. நல்லவேலை ஒன்றும் பெரிதான பிரச்னை இல்லை, உடனேயே சரிசெய்து விட்டோன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

NEXT STORY
சின்னப் பிரச்னைதான் சரிசெய்துவிட்டோம் - ஹெலிகாப்டரை பழுதுபார்த்த ராகுல்காந்தி - வைரல் புகைப்படம்! Description: ராகுல்காந்தி பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் குழுவுடன் இணைந்துச் செயல்பட வேண்டும் என்பது எல்லா கைகளும் இணைந்து செயல்படுவதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles