வயநாட்டில் வரலாறு படைத்த காங்கிரஸ் - 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி!

செய்திகள்
Updated May 23, 2019 | 17:55 IST | Times Now

காங்கிரஸைப் பொறுத்த வரையில் ராகுலின் மனம் கவர்ந்த தொகுதியாக எப்போதும் இருந்து வந்தது உத்திரபிரதேசம் அமேதி தொகுதி.

election 2019, தேர்தல் 2019
ராகுல் காந்தி  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: மக்களவைத் தேர்தல் 2019ல் கேரளா வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார். 

காங்கிரஸைப் பொறுத்த வரையில் ராகுலின் மனம் கவர்ந்த தொகுதியாக எப்போதும் இருந்து வந்தது உத்திரபிரதேசம் அமேதி தொகுதி. கடந்த 2004ம் ஆண்டு முதலே இங்கிருந்துதான் ராகுல் காந்தி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு வந்தார். 

இந்நிலையில் இந்த வருடம், அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இந்நிலையில் இந்த இரட்டை தொகுதி போட்டிக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் விமர்சனம் எழுந்தது. தோல்வி பயத்தாலேயே அவர் வயநாட்டிலும் போட்டியிடுகிறார் என்று விமர்சித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே ராகுல் காந்திக்கு அமேதியில் பின்னடைவும், வயநாட்டில் முன்னிலையும் இருந்து வந்தது.

எனினும், வடக்கு வாழவைக்கவிட்டாலும், தெற்கு திகட்டத் திகட்ட ராகுலுக்கு வெற்றியை அள்ளிக் கொடுத்துள்ளது. அமேதியில் முன்னிலை இல்லையென்றாலும், வயநாட்டில் கிட்டதட்ட 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் ராகுல்.

அங்கு அவர் 12,76,945 வாக்குகள் பெற்று வரலாறு காணாத சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் பி.பி.சுனீர் 4,777,83 வாக்குகள் பெற்றுள்ளார். ராகுலுக்கும், சுனீருக்கும் இடையில் 64.49%-24.13% வாக்குகள் வித்தியாசம். பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் இங்கு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், தனது தாய்த்தொகுதியான அமேதியில் வெற்றியை இழந்துள்ளார் ராகுல் என்பது மறுக்க முடியாத உண்மை.

NEXT STORY
வயநாட்டில் வரலாறு படைத்த காங்கிரஸ் - 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி! Description: காங்கிரஸைப் பொறுத்த வரையில் ராகுலின் மனம் கவர்ந்த தொகுதியாக எப்போதும் இருந்து வந்தது உத்திரபிரதேசம் அமேதி தொகுதி.
Loading...
Loading...
Loading...