’மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு இது...தலைவணங்கி ஏற்கிறேன்’ - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

செய்திகள்
Updated May 23, 2019 | 18:43 IST | Times Now

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜகவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

election 2019, தேர்தல் 2019
ராகுல் காந்தி  |  Photo Credit: Twitter

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்து முன்னிலையில் இருந்து வருகின்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர், ``மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் முடிவுக்கு நான் வண்ணச்சாயம் பூச விரும்பவில்லை. மக்களின் முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன். மக்கள் அவர்களுடைய தெளிவான முடிவுகளை கொடுத்துள்ளனர்.

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜகவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

காங்கிரஸின் இந்த தோல்விக்கு நான் முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் நீடிப்பது அல்லது ராஜினாமா செய்வது தொடர்பாக காங்கிரஸ் குழு முடிவு செய்யும்.

என்னை நோக்கி எத்தனை விமர்சனங்கள், வேறுபாடுகள், அவதூறுகள் எழுப்பப்பட்டாலும் நான் அவற்றை உண்மையான அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து அன்பு செலுத்துவேன். எது தவறாக சென்றது என்பது குறித்து விவாதம் செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல. தொடர்ந்து போராடுவோம்’ என்று பேசியுள்ளார். 

NEXT STORY
’மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு இது...தலைவணங்கி ஏற்கிறேன்’ - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! Description: அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜகவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...