ராகுல் காந்தி யோசித்து பேசவேண்டும்: வழக்கை முடித்த உச்சநீதிமன்றம்

செய்திகள்
Updated Nov 14, 2019 | 14:21 IST | Times Now

மீனாட்சி லேகி தொடந்த அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Rahul Gandhi
Rahul Gandhi  

உச்சநீதிமன்றத்தை அவமதித்ததற்காக ராகுல்காந்தியின் மன்னிப்பை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்ட போது ரஃபேல் ஊழல் குறித்து பேசினார். அப்போது மோடியை உச்சநீதிமன்றமே திருடன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பா.ஜ.க எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி, தான் பேசியது தவறு என்று ஒரு பிராமண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிபதிகள் ராகுல் பதிலில் திருப்தி இல்லை என்றும் விரிவான விளக்கம் அளிக்குமாறும் மீண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றம் கூறியதாக ராகுல் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ராகுல்காந்தி மீண்டும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். காவலாளியே திருடன் என்று மோடியை விமர்சிக்கும் வார்த்தையோடு ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இணைந்து தவறாக பேசிவிட்டதாகவும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அதில் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மீனாட்சி லேகி தொடந்த அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் ராகுல்காந்தி மிகவும் கவனமாக பேச வேண்டியது அவசியம் என்று எச்சரித்து இந்த வழக்கை முடித்துவைத்தனர். 

NEXT STORY