ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மத்திய அரசு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டிடம் 36 ரஃபேல் போர் விமானங்களை ரூபாய் 58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டையது.
பின் இது தொடர்பாக புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கூரி உச்சநீதிமன்றத்தில் 6 வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் குழு, கடந்த டிசம்பர் மாதம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டுமென்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய் குழு மீண்டும் அனைத்து சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.