பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 109 மணி நேரத்துக்குப் பின் மீட்க்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

செய்திகள்
Updated Jun 11, 2019 | 10:30 IST | ANI

நயன்தாரா படமான அறம் படத்தில் காட்டியது போலவே உள்ளே கேமரா, ஆக்ஸிஜன் எல்லாம் செலுத்தப்பட்டு குழந்தையை கண்காணித்தும் வந்தனர்.

Punjab: After 109-hour operation, two-year-old boy pulled out of borewell, declared dead
Punjab: After 109-hour operation, two-year-old boy pulled out of borewell, declared dead  |  Photo Credit: ANI

கடந்த வியாழக்கிழமை ஆழ்துறை கிணற்றில் விழுந்த குழந்தை 109 நேரம் கழித்து இன்று அதிகாலை மீட்க்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இரண்டு வயதான குழந்தை ஃபத்வீர் சிங் கடந்த வியாழக்கிழமை விளையாடிக்கொண்டு இருக்கும்போது அருகில் இருந்த ஆள்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துவிட்டது. 150 அடி ஆழக் கிணற்றில் விழுந்த குழந்தையை அவனது அம்மா தூக்க முயல குழந்தை இன்னும் கீழே சென்று இருக்கிறான். உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினரும் அங்கே வர கடந்த 4 நாட்களுக்கும் மேலாக குழந்தையை மீட்கப் போராடி வந்தனர்.
 

நயன்தாரா படமான அறம் படத்தில் காட்டியது போலவே உள்ளே கேமரா, ஆக்ஸிஜன் எல்லாம் செலுத்தப்பட்டு குழந்தையை கண்காணித்தும் வந்தனர். கிட்டத்தட்ட 109 மணிநெரத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. நாடே குழந்தைக்காக நான்கு நாட்களாகப் பரார்த்தனை செய்து வந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குழந்தை இறந்தது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

NEXT STORY
பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 109 மணி நேரத்துக்குப் பின் மீட்க்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு Description: நயன்தாரா படமான அறம் படத்தில் காட்டியது போலவே உள்ளே கேமரா, ஆக்ஸிஜன் எல்லாம் செலுத்தப்பட்டு குழந்தையை கண்காணித்தும் வந்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles