புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை- பாதுகாப்புப்படை அதிரடி!

செய்திகள்
Updated Jun 18, 2019 | 15:40 IST | Times Now

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை  |  Photo Credit: ANI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையின்போது அந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்றிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. 

ஜெய்ஷி-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஜத் மெக்பூல் பட்(என்கிற) ஹபீஸ் என்ற தீவிரவாதியையும், தஸ்பிக் என்ற மற்றொரு தீவிரவாதியையும், அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேரா பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக்கொல்லப் பட்ட நிலையில், பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்நார். 

Terrorist Sajjad-Bhat gunned down

 

புல்வா பகுதியில் 44 வது ராஷ்டீரிய ரைபில் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு சஜத் பட் மூளையாக செயல்பட்டுள்ளார்.

Terrorist led attack in kashmir

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 உயிரிழக்கக் காரணமான தாக்குதலிலும் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது.

புல்வாமாவில் பிப்ரவரி  14 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை தீவிரவாதி சஜத் பட் வழங்கியுள்ளார். தெற்கு காஷீமீர் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்புப் படையினர் இந்த தாக்குதலை இன்று நடத்தினர். 
 

NEXT STORY
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை- பாதுகாப்புப்படை அதிரடி! Description: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola