ராம் ஜெத்மலானி மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

செய்திகள்
Updated Sep 08, 2019 | 14:07 IST | Times Now

ராம் ஜெத்மலானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "தேசம் ஒரு சிறந்த சட்ட நிபுணரை இழந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

former Union minister Ram Jethmalani
former Union minister Ram Jethmalani   |  Photo Credit: PTI

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடலுக்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளி்ட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ராம் ஜெத்மலானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "தேசம் ஒரு சிறந்த சட்ட நிபுணரை இழந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " தன் மனதில் பட்டதை பயமின்றி தைரியமாக பேசும் சிறந்த பண்பு கொண்டவர் ராம் ஜெத்மலானி. அவசர நிலை காலத்தில் மக்களின் சுதந்திரத்துக்கான அவரது துணிச்சலும் போராட்டமும் என்றும் நினைவில் கொள்ளப்படும்.

இந்த துயரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

NEXT STORY