சிறப்பு அஸ்தஸ்து ரத்தால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் பலனடைவார்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

செய்திகள்
Updated Aug 14, 2019 | 22:09 IST | Times Now

நாட்டின் ஒரு பகுதியில் பெரு வெள்ளம், இயற்கைச் சீற்றங்கள், மறு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதை எதிர்கொள்ள அமைப்பு ரீதியான கட்டமைப்புகளை அரசு உருவாக்க முடியும்.

President Ram Nath Kovind, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  |  Photo Credit: YouTube

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அஸ்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் மிகுந்த பலனை அடைவார்கள் எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நாளை 73-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புதன்கிழமை இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில், " ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என நான் நம்புகிறேன். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் பெறுகின்ற உரிமைகள், சலுகைகளை இனி அவர்களும் பெற முடியும். 

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பல முக்கிய மசோதாக்கள் வரும் ஐந்தாண்டுகளுக்கு நாம் பாதுகாக்க வேண்டியது எது என்பதைக் குறிப்பிடுவதாகவே இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்தக் கலாசாரம், அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் பரவ வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உதவும் வகையில் கட்டமைப்பை உருவாக்க முடியும். ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களுக்கு வீட்டுவசதி, எரிசக்தி, கழிப்பறைகள் வசதி செய்தல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் போன்ற வடிவத்தில் கட்டமைப்பு வசதிகளை கட்டுமான அரசு செய்ய முடியும். நாட்டின் ஒரு பகுதியில் பெரு வெள்ளம், இயற்கைச் சீற்றங்கள், மறு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதை எதிர்கொள்ள அமைப்பு ரீதியான கட்டமைப்புகளை அரசு உருவாக்க முடியும். அகலமான, சிறந்த நெடுஞ்சாலைகள், பாதுகாப்பான, விரைவான ரயில் சேவைகள், விமான நிலையங்கள், கடலோரப் பகுதிகளில் துறைமுகங்கள் என்ற வடிவில், போக்குவரத்துக் கட்டமைப்பை அரசு உருவாக்க முடியும். 

72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நாம், மிகவும் தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம். நமது தேசம் விடுதலைபெறவும் சமூகத்தின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் மாற்றியமைக்கும் நமது தொடர் முயற்சிகளுக்கும் வழிகாட்டும் விதமாக திகழும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை ஒருசில வாரங்களில் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடவிருக்கிறோம்" என தெரிவித்தார்.

NEXT STORY
சிறப்பு அஸ்தஸ்து ரத்தால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் பலனடைவார்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை Description: நாட்டின் ஒரு பகுதியில் பெரு வெள்ளம், இயற்கைச் சீற்றங்கள், மறு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதை எதிர்கொள்ள அமைப்பு ரீதியான கட்டமைப்புகளை அரசு உருவாக்க முடியும்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles