'கோட்சே ஒரு தேசபக்தர்’ - பிரக்யா சிங் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

செய்திகள்
Updated May 16, 2019 | 16:57 IST | Times Now

பிரக்யா சிங் செய்தியாளர்களிடம், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று பேசினார்.

india, இந்தியா
பிரக்யா சிங்  |  Photo Credit: Twitter

போபால்: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பாஜக போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரக்யா சிங் செய்தியாளர்களிடம், ``நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ என்று பேசியிருந்தார்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்த கருத்துக்கு எதிர்வினையாக இதைத் தெரிவித்திருந்தார் பிரக்யா.

இந்நிலையில், பிரக்யாவின் இந்த கருத்துக்கு அவர் இடம்பெற்றுள்ள கட்சியான பாஜகவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோட்சே பற்றி பிரக்யாசிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியுள்ளார். மேலும், கோட்சே பற்ரிய கருத்து தொடர்பாக வேட்பாளர் பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

NEXT STORY
'கோட்சே ஒரு தேசபக்தர்’ - பிரக்யா சிங் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்! Description: பிரக்யா சிங் செய்தியாளர்களிடம், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று பேசினார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles