'ரியல் செளக்கிதார் இவர்தான்’ - வாக்களிக்க வந்த பெண்ணின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அதிகாரி; வைரலாகும் போட்டோ!

செய்திகள்
Updated Apr 23, 2019 | 19:02 IST | Times Now

ர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிப்பதற்காக குழந்தையுடன் வந்திருந்த தாய் ஒருவர் வாக்குப்பதிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

election 2019, தேர்தல் 2019
குழந்தையை கொஞ்சும் காவல்துறை அதிகாரி  |  Photo Credit: Twitter

பெங்களூரு: மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வாக்களிக்க வந்த பெண்ணின் குழந்தையை அவர் வாக்களித்துவிட்டு வரும்வரை அன்புடன் பார்த்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ள தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிப்பதற்காக குழந்தையுடன் வந்திருந்த தாய் ஒருவர் வாக்குப்பதிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதை கவனித்த காவல்துறை அதிகாரியான விதேஷ் குமார் என்பவர், அவர் வாக்களித்துவிட்டு வரும்வரையில் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டார். மேலும், அவர் அக்குழந்தையை கொஞ்சி குதூகலித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

இதே போன்று மேலும் இரண்டு அதிகாரிகள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
'ரியல் செளக்கிதார் இவர்தான்’ - வாக்களிக்க வந்த பெண்ணின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அதிகாரி; வைரலாகும் போட்டோ! Description: ர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிப்பதற்காக குழந்தையுடன் வந்திருந்த தாய் ஒருவர் வாக்குப்பதிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles