நாளை வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்!

செய்திகள்
Updated Apr 25, 2019 | 09:15 IST | Times Now

நாளை காலை 11.30 - 12 மணி அளவில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரணாசியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.

17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதுவரை ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உட்பட 47 மாநிலங்களில் 303 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கிறது.

ஏழாவது கட்டமாக மே-19 ஆம் தேதி நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவில் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியும் அடக்கம். இந்தத் தொகுதியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதற்காக நாளை 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதற்காக இன்று வாரணாசிக்குச் செல்லும் மோடி அங்கு நடைபெறும் மாபெறும் பேரணியில் கலந்துகொள்கிறார். இதற்காக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேரணியில் கலந்துகொண்ட பின்பு வாரணாசியில் கங்கைக்கரையில் நடைபெறும் புகழ்பெற்ற கங்கா ஆரத்தியிலும் பங்குகொள்கிறார்.

பின்னர் நாளை காலை 12 மணி அளவில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னால் கால பைரவர் கோயிலில் பூஜைகளில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சிவராஜ், பியூஷ் கோயல், நிதின் கட்காரி ஆகியோரும் செல்கின்றனர். முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக செய்திகள் வெளியானது. அதனை பா.ஜ.க மறுத்துள்ளது.

NEXT STORY
நாளை வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்! Description: நாளை காலை 11.30 - 12 மணி அளவில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...
Loading...
Loading...