ஷாங்காய் மாநாடு: கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி

செய்திகள்
Updated Jun 13, 2019 | 08:52 IST | Times Now

பிரதமர் மோடியின் கிர்கிஸ்தான் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி அளித்திருந்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி பயணம் மேற்கொள்கிறார்.

 PM Narendra Modi departed for Bishkek
பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்   |  Photo Credit: ANI

டெல்லி: 19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19-வது மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இன்று தொடங்கும் மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி ஆகியோரை சந்தித்துப் பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அப்போது தீவிரவாத ஒழிப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனேனில் இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார உறவு இருந்து வருவதும், இந்திய கலாசாரத்தை அந்த நாட்டு மக்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் வருகை தருகிறார். ஆனால், அவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் கிர்கிஸ்தான் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி அளித்திருந்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி பயணம் மேற்கொள்கிறார். 

NEXT STORY
ஷாங்காய் மாநாடு: கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி Description: பிரதமர் மோடியின் கிர்கிஸ்தான் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி அளித்திருந்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி பயணம் மேற்கொள்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles