73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

செய்திகள்
Updated Aug 15, 2019 | 09:26 IST | Times Now

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்தார் படேலின் கனவு நனவாகியுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi  |  Photo Credit: ANI

டெல்லி: நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை இன்று காலை ஏற்றினார்.

நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காலை 7.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினாா். அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். புதிய அரசு பதவியேற்று 10 வாரங்கள் கூட நிறைவடையவில்லை அதற்குள் அனைத்து துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவை சர்தார் படேலின் கனவு நனவாகியுள்ளது. இன்று நாம் சுதந்திர தினம் கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் விரைவில் இயல்பு நிலை திரும்ப நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்றார்.

இந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

NEXT STORY
73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி Description: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்தார் படேலின் கனவு நனவாகியுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...