'தமிழகத்திலும் விரைவில் பாஜக கால் பதிக்கும்’ - பிரதமர் மோடி!

செய்திகள்
Updated Jun 09, 2019 | 22:33 IST | Times Now

பிரதமர் மோடிக்கு ஏழுமலையான் சன்னிதியில் 10 நிமிடங்கள் வழிபாடு நடத்திய பிரதமருக்கு வேத மந்திரங்கள் முழங்க தரிசனம் வழங்கப்பட்டது.

tirupathi, திருப்பதி
திருப்பதியில் பிரதமர் மோடி  |  Photo Credit: ANI

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசன செய்தார். அப்போது அவருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் உடனிருந்தார்.

இரண்டாவது முறையாக பிரதமராகியதைத் தொடர்ந்து முதன்முறையாக அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார்.

 

 

சன்னிதியில் 10 நிமிடங்கள் வழிபாடு நடத்திய பிரதமருக்கு வேத மந்திரங்கள் முழங்க தரிசனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு கோயில் லட்டு பிரசாதம், பெருமாள்-தாயார் புகைப்படம் ஆகியவை வழங்கப்பட்டன.

 

 

முன்பாக ரேணிகுண்டா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆந்திர மாநில வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்படும். பாஜக விரைவில் ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும். திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக எனக்கு வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று பேசினார். தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
 

NEXT STORY
'தமிழகத்திலும் விரைவில் பாஜக கால் பதிக்கும்’ - பிரதமர் மோடி! Description: பிரதமர் மோடிக்கு ஏழுமலையான் சன்னிதியில் 10 நிமிடங்கள் வழிபாடு நடத்திய பிரதமருக்கு வேத மந்திரங்கள் முழங்க தரிசனம் வழங்கப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles