15 மணிநேர தியானத்துக்குப் பின் மோடி பேசியது இதுதான்!

செய்திகள்
Updated May 19, 2019 | 12:15 IST | Times Now

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு ஆன்மீகப் பயணமாக கேதார்நாத் சென்றிருக்கும் பிரதமர் மோடி 15 மணிநேர தியானத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

PM Modi spoke to media after 15-hour meditation at holy cave
PM Modi spoke to media after 15-hour meditation at holy cave  |  Photo Credit: ANI

நேற்று காலை உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற மோடி அங்கு வழிபாடு நடத்தியுள்ளார். மாலைல்யில் கேதார்நாத் மலை உச்சியில் உள்ள குகைக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாக சென்றவர் நேற்று இரவு அங்கு தங்கினார்.

பின் தியானத்தில் ஈடுபட்டவர் 15 நேரம் தியானம் முடிந்தபின் இன்று காலை கேதார்நாத்தில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தவர், கேதார்நாத்துக்கும் எனக்கும் ஏதோ ஒரு உணர்வுப்பூர்வமான உறவு இருப்பதாக எண்ணுகிறேன்நான் எனக்காகவோ, ஏன் தேர்தல் வெற்றிக்காகவோ பிரார்த்தனை செய்யவில்லை. நம் மக்கள் அனைவருக்காகத்தான் பிரார்த்தனை செய்தேன் என்றார்.

மேலும் தேர்தல் நடத்தை விடுமுறைகள் அமலில் இருக்கும்போது என்னைக் கோவிலுக்குச் செல்ல அனுமதி அளித்த தேர்தல் ஆணயத்துக்கு நன்றி என்று கூறினார். விரைவில் கேதார்நாத் கோவில் அமைந்திருக்கும் பகுதி நன்றாக மேம்ப்படுத்தப்படும் என்றும் கண்டிப்பாக இதனால் சுற்றுபுறச்சூழல், சுற்றுலா எந்தவிதத்திலும் பாதிப்படையாது என்றும் உறுதிகூறுகிறேன் என்றார். 

இமயமலையில் அமைந்திருக்கும் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி பண்டிகை வரையிலான காலகட்டத்தில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் திறந்திருக்கும். மகாபாரதக் கதையின்படி போருக்கு பிறகு பாண்டவர்கள் வந்து வழிபட்ட தலம் கேதார்நாத் என்பது கூடுதல் தகவல்.

NEXT STORY
15 மணிநேர தியானத்துக்குப் பின் மோடி பேசியது இதுதான்! Description: தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு ஆன்மீகப் பயணமாக கேதார்நாத் சென்றிருக்கும் பிரதமர் மோடி 15 மணிநேர தியானத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles