டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்‌ஷித்: பிரதமர் மோடி இரங்கல்

செய்திகள்
Updated Jul 20, 2019 | 18:11 IST | Times Now

டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PM Modi with Late Delhi CM Sheila Dikshit
PM Modi with Late Delhi CM Sheila Dikshit   |  Photo Credit: Twitter

டெல்லி: டெல்லியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்‌ஷித் என பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்‌ஷித் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 81. மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய இரங்கல் செய்தியில், " டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்‌ஷித் மறைவு செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆட்சி காலத்தில் டெல்லியில் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் அவரை எப்போதும் நினைவு கூறும். அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டெல்லியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் ஷீலா தீக்‌ஷித். அவரது மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஷீலா தீக்‌ஷித்தின் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆயுள் காலம் முழுவதும் காங்கிரஸ் உறுப்பினராகவே இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

தனது அன்பான மகளை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது என்று ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். ஷீலா தீக்‌ஷித், மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்ததை குறிப்பிட்டுள்ள அவர் டெல்லி மக்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

 

ஷீலா தீக்‌ஷித்தின் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...