வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

செய்திகள்
Updated May 27, 2019 | 12:08 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு  |  Photo Credit: ANI

வாரணாசி: 2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றுள்ள மோடி வழிபாட்டில் கலந்துகொண்டார்.

மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு நேற்று சென்ற மோடி, அகமதாபாத்தில் தனது தாயரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், அங்குள்ள கான்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது, மக்களவைத் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, ஆட்சிக்கு ஆதரவான மக்களின் நிலையை காட்டுக்கிறது என்று தெரிவித்த அவர், இந்த வெற்றி சர்வதேச அளவில் இந்தியாவுக்கான சரியான இடத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். 

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகம் என தெரிவித்தவர்களை கடுமையாக தாக்கிய பிரதமர் மோடி, 6 வது கட்டத் தேர்தலுக்குப் பின்னர் தங்களுக்கு 300 க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என தான் உறுதியாக தெரிவித்ததாக குறிப்பிட்டார். தான் அவ்வாறு தெரிவித்தபோது சிலர் தன்னை கேலி செய்ததாக குறிப்பிட்ட பிரதமர், முடிவுகளை தற்போது அனைவரும் காண முடிகிளது என்று தெரிவித்தார்.

இதுபோன்ற மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்தது வரலாறு காணாத ஒன்று எனத் தெரிவித்த மோடி, மீண்டும் நிலையான அரசு அமைய வேண்டும் என முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். 
 

NEXT STORY
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு! Description: மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!