வாரணாசியில் மோடி: இந்தியா 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகும் என நம்பிக்கை!

செய்திகள்
Updated Jul 06, 2019 | 14:08 IST | Times Now

இந்தியா 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:மோடி நம்பிக்கை
5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:மோடி நம்பிக்கை  |  Photo Credit: ANI

லக்னோ: பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தொடங்கி வைப்பதற்காக உத்தரப்பிரதேச மாநலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாரணாசிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில பாரதிய ஜனதா தலைவர் எம்.என்.பாண்டே ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும் லால் பகதூர் சாஸ்திரியின் மூத்த மகனுமான அனில் சாஸ்திரி, பாரதிய ஜனதாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் இளைய மகன் சுனில் சாஸ்திரி ஆகியோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, மரம் வளர்ப்பு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொண்டர்கள் மத்தியில் அவர், அனைத்து குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு பெரும் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்தார். இதன்மூலம் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில், அனைத்து குடிமக்களும் தண்ணீரை சேகரிக்க வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார். தண்ணீர் உள்ள அளவை விட, தண்ணீரை வீணாக மற்றும் அக்கறையின்றி உபயோகிப்பதே மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, வீட்டு உபயோகத்திற்காக இருந்தாலும் கூட, தேவையற்ற வழியில் தண்ணீர் வீணாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

வாரணாசியில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலங்கானாவில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தேசிய அளவிலான இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கோவாவில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறார். இதேபோல், சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் பாரதிய ஜனதா முக்கிய தலைவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

NEXT STORY
வாரணாசியில் மோடி: இந்தியா 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகும் என நம்பிக்கை! Description: இந்தியா 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...