ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

செய்திகள்
Updated Jun 26, 2019 | 22:08 IST | Times Now

வருகிற 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களும் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

modi, மோடி
ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி  |  Photo Credit: ANI

டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜி 20 என அழைக்கப்படும் அமைப்பில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, வருகிற 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களும் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர், ஜப்பான் பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார்.

பிரதமர் மோடி நாளை காலை 8 மணிக்கு கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை அடைகிறார். மதியம் 1.50 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவு 7 மணிக்கு குபேயில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.  

மேலும், ஜி 20 மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றுள்ளார். 

NEXT STORY
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி Description: வருகிற 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களும் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola