கிரிஷ் கர்னாட் மறைவு.. குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

செய்திகள்
Updated Jun 10, 2019 | 13:37 IST | Times Now

பிரபல கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  PM Modi and President Ram Nath Kovind mourned to actor Girish Karnad
PM Modi and President Ram Nath Kovind mourned to actor Girish Karnad  |  Photo Credit: Twitter

டெல்லி: கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட எழுத்தாளரும் பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவால் இன்று காலை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81. எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட கிரிஷ் கர்னாட் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். நாடக் துறைக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் அவரது இழப்பு எழுத்து, நடிப்புத் துறைக்கு ஈடு செய்ய முடியாதது என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிரிஷ் கர்னாட் மறைவைக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , " நடிப்பு திறமையால் அனைத்து ஊடகங்கள் மூலம் தன்னை நினைவூட்டுபவர் கிரிஷ் கர்னாட். உணர்ச்சி பொங்கும் அவரது பேச்சு மனதை கட்டிபோடும். வரும் காலங்களிலும் அவரது படைப்புகள் மிகவும் பிரபலமாக வேண்டும். கிரிஷ் கர்னாட் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைவதாகவும், அவரது ஆன்மா சாந்தி அடைய  பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்".   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
கிரிஷ் கர்னாட் மறைவு.. குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் Description: பிரபல கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Loading...
Loading...
Loading...