'பாஜக வெற்றி பெறாத மாநில அரசுகளுக்கும் முழு ஒத்துழைப்பு உண்டு’ - பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை!

செய்திகள்
Updated May 23, 2019 | 21:08 IST | Times Now

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து உரையாற்றினார். இருவரும் இணைந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் முன்பாக உரையாற்றினார்கள்.

election 2019, தேர்தல் 2019
பிரதமர் மோடி உரை  |  Photo Credit: ANI

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் மீண்டும் பிரதமராக நீடிக்கும் நரேந்திர மோடி மக்களுக்கு நடுவில் உரையாற்றினார்.

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து உரையாற்றினார். இருவரும் இணைந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் முன்பாக உரையாற்றினார்கள்.

முன்னதாக பேசிய அமித்ஷா, ‘இந்த வெற்றியானது பிரதமர் மோடி அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பால் கிடைத்த வெற்றி. மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையில் சிக்கி உயிரிழந்த தொண்டர்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல் வெற்றியை காணிக்கையாக்குகிறேன். கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், அந்த மாநிலங்கள் எல்லாவற்றிலும் பாஜக 50% வாக்குகளைப் பெற்றுள்ளது’ என்று உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டு மக்களுக்கு இந்த வெற்றிக்காக சிரம் தாழ்ந்து என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக ஜனநாயக அரசியலில் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கைகளுக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு அதிக பெரும்பான்மையுடன் இந்தியாவில் அமையும் ஆட்சி எங்களுடையது. மோசமான வானிலை, புயல் போன்ற சூழ்நிலைகள் நிலவியபோதும் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பின் மூலமாக வாரிசு மற்றும் சாதி அரசியல் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. 

இன்று இந்தியாவில் இரண்டு சாதிகள்தான். ஒருவர் ஏழைகள்..மற்றொருவர் ஏழைகளுக்கு உதவ விரும்புபவர்கள்...அவர்களை ஏழ்மையிலிருந்து வெளியில் கொண்டுவர விரும்புபவர்கள். பாஜகவிற்கு கிடைத்த வெற்றி சொந்த வீட்டிற்காக ஏங்கும் மக்கள் கொடுத்த வெற்றி. 130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது. பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று பேசியிருக்கிறார். 

NEXT STORY
'பாஜக வெற்றி பெறாத மாநில அரசுகளுக்கும் முழு ஒத்துழைப்பு உண்டு’ - பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை! Description: பாஜக தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து உரையாற்றினார். இருவரும் இணைந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் முன்பாக உரையாற்றினார்கள்.
Loading...
Loading...
Loading...