மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி- 30ம் தேதி பதவியேற்பு விழா!

செய்திகள்
Updated May 26, 2019 | 22:44 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வென்றுள்ளது.

india, இந்தியா
தாயிடம் ஆசி வாங்கும் நரேந்திர மோடி  |  Photo Credit: Times Now

டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் சார்பில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவை வருகின்ற 30ம் தேதியன்று இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வென்றுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற  பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி பாஜக எம்பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனையடுத்து குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வருகின்ற 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் இன்று தனது தாயாரைச் சந்தித்த மோடி அவரிடம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பதவியேற்க ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி- 30ம் தேதி பதவியேற்பு விழா! Description: மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வென்றுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles