மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம்!

செய்திகள்
Updated Sep 19, 2019 | 14:34 IST | Times Now

ரயில் பயணங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆங்காங்கு வீசப்படுவதை கட்டுப்படுத்த மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம்,Plastic bottle crushing machine installed in Mumbai Rajdhani Express
மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம்  |  Photo Credit: IANS

மும்பை: மேற்கு ரயில்வே மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தைப் பொருத்தியுள்ளது.

ரயில் பயணங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுவதை கட்டுப்படுத்த ரயில்வே துறை புதிய திட்டத்தைக் கையாண்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பை-டெல்லி இடையே பயணிக்கும் மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்(PET-Polyethylene Terephthalate) பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல ரயில் நிலையங்களில் இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் ஏற்கனவே உள்ளது. இருப்பினும் தற்போது ரயிலிலும் பொருத்தியுள்ளனர்.

இந்த இயந்திரமானது ஒரு நாளைக்கு 3000 பெட் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கி, 90 சதவீதத்தை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. இது 200 மி.லிட்டர் முதல் 2.5 லிட்டர் அளவிலான பெட் பிளாஸ்டிக் பாட்டில்களை  மறுசுழற்சி செய்யும். கிட்டத்தட்ட 1500 பாட்டில்களை தாங்கும் இடம் கொண்டது இந்த இயந்திரம். இந்தியன் ரயில்வேஸில் ஸ்வச் பாரத் மற்றும் கோ-க்ரீன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுக்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து நாடு முழுவதும் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை குறைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும் பிளாஸ்டிக் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ரயில் நிலையங்களில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் தடை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.      
     

NEXT STORY