மக்களவைத் தேர்தல் 2019: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு! 60.21 சதவீத வாக்குகள் பதிவு

செய்திகள்
Updated May 19, 2019 | 20:36 IST | Times Now

7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

Phase 7 Election 2019 LIVE
Phase 7 Election 2019 LIVE  |  Photo Credit: ANI

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, தேதிகளில் முறையே ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மே 19  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.  

 பீகாரில் 8 தொகுதிகள், ஹிமாச்சலில் 4 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், உத்திர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி என 59 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் இன்று நடைபெற்றது. இவற்றுடன் தமிழ்நாட்டில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு முன்னதாக வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மாலை 6 மணியுடன் முடிவடைந்த 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் மொத்தம் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:00 pm: 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் 7-ம் கட்டமாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

3:30 pm:  59 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி பீகாரில் 46.66%, ஹிமாச்சல பிரதேசம் 49.43%, மத்தியபிரதேசம் 57.27%, பஞ்சாப் 48.18%, உத்தரப்பிரதேசம் 46.07%, மேற்கு வங்காளம் 63.58%, ஜார்க்கண்ட் 52.89%, சண்டீகர் 35.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:50 pm: பீகார் மாநிலம் பாட்னாவில் தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள் சபா, ஃபராஹ் தங்களின் வாக்கை முதல் முறையாக தனித்தனி பதிவு செய்தனர். 

 

 

2:10 pm: 59 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி பீகாரில் 36.20%, ஹிமாச்சல பிரதேசம் 34.47%, மத்தியபிரதேசம் 43.89%, பஞ்சாப் 36.66%, உத்தரப்பிரதேசம் 36.37%, மேற்கு வங்காளம் 47.55%, ஜார்க்கண்ட் 52.89%, சண்டீகர் 35.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:00 pm: மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளி பெண்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

 

 

1.45 pm: தமிழக இடைத்தேர்தல் மதியம் 1 மணிவரை வாக்குப்பதிவு நிலவரம் ஒட்டப்பிடாரம் 45.06%, திருப்பரங்குன்ரம் - 47.09%, சூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 58.68%

1.20 pm: மேற்கு வங்கத்தில் தனது 80 வயது தாயை வாக்களிப்பதற்காக தூக்கி வந்த மகன். 

 

 

1.15 pm: வாரணாசியில் பா.ஜ.கவின் மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோசி தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

 

 

1.00 pm:  பகல் 12 மணி வரை பதிவாக வாக்குகளில் நிலவரம்: பீகார் 18.90%, ஹிமாச்சலப் பிரதேசம்- 28.14%, மத்திய பிரதேசம் -29.48%, பஞ்சாப் -23.45%, உத்தரப்பிரதேசம்-23.16%, மேற்கு வங்கம் - 32.15% ஜார்க்கண்ட்-31.39%, சண்டிகர் -22.30% 

12.40 pm: காலை 11 மணி வரை தமிழ்நாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் நிலவரம்

11.40 am:  வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக, அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது அ.தி.மு.க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இவர் தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். 

11.30 am: மத்திய பிரதேசம், இந்தூர் பகுதியில்  மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

11.00 am: சூலூரில் 103 வயது மூதாட்டி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

காலை 9 மணி வரை பதிவாக வாக்குகளில் நிலவரம்: உத்தரப்பிரதேசம் - 5.97% ஹிமாச்சலப்பிரதேசம் - 0.87% ஜார்க்கண்ட் - 13.19% சண்டிகர் - 10.405 பஞ்சாப் - 4.64% மேற்கு வங்கம் - 10.54% பீகார் - 10.65% மத்திய பிரதேசம் - 7.16%

தமிழக இடைத்தேர்தல் காலை 9 மணி வரை பதிவாக வாக்குகளில் நிலவரம்: அரவக்குறிச்சி - 12.67%, சூலூர்- 14.40%, ஒட்டப்பிடாரம் - 14.53% , திருப்பரங்குன்றம் -12.05%

9.00 am: இன்று பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான நேற்றில் இருந்து கேதர்நாத்தில் உள்ள குகையில் தியானத்தில் இருந்த மோடி, இன்று கேதர்நாத் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை முடிந்தவுடன் தன்னை சந்திக்க வந்த மக்களைப்பார்வையிட்டார். 

 

 

8.30 am: உத்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று இரவே கையில் மை வைத்துவிட்டு பணம் கொடுத்துச் சென்றதாக பா.ஜ.க மீது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

 

யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் தனது  வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

8.10 am : கிரிக்கேட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் ஜலந்தரில் உள்ள கார்ஹி கிராமத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக வரிசையில் நிற்கிறார்.

 

 

8.00 am: தமிழகத்தில் சூலூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்வதற்காம வரிசையில் நிற்கும் மக்கள்

 

 

7:30 am: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், பாட்னாவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

 

 

 

 

6.30 am: மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

 

 

இன்றைய வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்கள்

NEXT STORY
மக்களவைத் தேர்தல் 2019: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு! 60.21 சதவீத வாக்குகள் பதிவு Description: 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!