பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!

செய்திகள்
Updated Sep 17, 2019 | 08:31 IST | Times Now

சவுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் தட்டுப்பாட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Petrol, diesel
Petrol, diesel  |  Photo Credit: BCCL

சவுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் தட்டுப்பாட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி சவுதியில் உள்ள எண்ணெய் ஆலைகளில் கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலமாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சவுதி எண்ணெய் உற்பத்தி துறை பெரிதும் பாதுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பயன்படுத்தும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலால் செய்வதறியாமல் போயுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவரும் வேளையில், சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை நிறைந்த இந்தியாவை எடுத்துக் கொண்டால் கையிருப்பு இருக்கும் சரக்குகளை குறைந்த காலத்துக்கே பயன்படுத்த முடியும். 

தற்போது சவுதியில் பாதியாக எண்ணெயின் உற்பத்தி குறைந்துவிட்டாதாலும் மீண்டும் இந்த உற்பத்தி எப்போது தொடங்கும் என்று தெரியாததாலும் தற்போது கச்சா எண்ணெயின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூபாய் 5 முதல் 6 வரை விலை உயரக்கூடும் என்று இந்திய விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் தாக்குதல் நடத்தப்பட்ட அராம்கோ நிறுவனம், இதனால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் ஏதும் பாதிப்பு இருக்காது என்று உறுதியளித்துள்ளது. 

NEXT STORY