பட்ஜெட்டில் வரி அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் உயர்வு!மெட்ரோ நகரங்களில் என்ன விலை?

செய்திகள்
Updated Jul 06, 2019 | 09:17 IST | Times Now

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் இன்று 2 முதல் 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.

பெட்ரோல், டீசல் உயர்வு
பெட்ரோல், டீசல் உயர்வு  |  Photo Credit: BCCL

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் இன்று 2 முதல் 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. சென்னையில், நேற்று பெட்ரோல் 73.19 ருபாயாக இருந்த நிலையில், இன்று 2 ரூபாய் 57  பைசா அதிகரித்து 75.76 ரூபாயாக உள்ளது. டீசல் விலை 2 ரூபாய் 52 பைசா அதிகரித்து 70.48 ரூபாயாக உள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் சில்லரை விற்பனையைப் பொறுத்தவரை பெருநகரங்களில் மற்ற நகரங்களை விட டெல்லியில் விலை குறைவாகவே உள்ளது. டெல்லியில் நேற்று பெட்ரோல் விலை 70.51 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 72.96 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்று 64.33 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 66.69 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

கொல்கத்தாவில், பெட்ரோல் விலை நேற்றைய விலையான 72. 75ரூபாயில் இருந்து  2 ரூபாய் 40 பைசா அதிகரித்து 75.15 ரூபாயாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலான 68.59 இல் இருந்து  2 ரூபாய் 36 பைசா அதிகரித்து 72.75 ரூபாயாக உள்ளது. 

இதேபோல், மும்பையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 2 ரூபாய் 42 பைசா அதிகரித்து 78.57 ரூபாயாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலான 67.40 இல் இருந்து 2 ரூபாய் 50 பைசா அதிகரித்து 69.90 ரூபாயாக உள்ளது. 

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு இறக்குமதி வரி மற்றும் சாலை மற்றும் உட்கட்டமைப்பு வரி தலா ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

NEXT STORY
பட்ஜெட்டில் வரி அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் உயர்வு!மெட்ரோ நகரங்களில் என்ன விலை? Description: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் இன்று 2 முதல் 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola