பான் எண்ணை ஆதாருடன் இணைக்க 30-ம் தேதி கடைசி நாள்! இணைக்காவிட்டால் என்னவாகும்?

செய்திகள்
Updated Sep 27, 2019 | 15:13 IST

பான் கார்டை ஆதாருடன் இணைக்க கடைசி தேதி இம்மாதம் 30-ஆம் தேதி முடிவடைகிறது. பான் - ஆதார் இணைப்பதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இணைக்காதவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Representative Image
Representative Image   |  Photo Credit: BCCL

டெல்லி: பான் கார்டை ஆதார் அட்டையுடன் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், அந்த குறிப்பிட்ட பான் கார்டு செல்லாதவையாகிவிடும் என மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு அக்டோபர் 1 -ஆம் தேதி ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் கார்டு செல்லாதவையாகிவிடும் என மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும், அந்த அட்டையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என்பது குறித்தும் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே இணையத்தின் மூலம் ஆன்லைனிலேயே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. 

பான் - ஆதார் இணைப்பது எப்படி?

  • www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
  • இடது புறம் உள்ள Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும் 
  • திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
  • ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாவிட்டில் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
  • PAN-Aadhaar LINK
  • விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.
  • Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
  • ஏற்கனவே இணைத்தவர்கள் தங்களது பான் எண், ஆதார் எண்ணை டைப் செய்து செக் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...