இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் - பாக்.அமைச்சர் ட்வீட்!

செய்திகள்
Updated Sep 10, 2019 | 18:00 IST | Times Now

பாகிஸ்தான் அமைச்சர் பவத் சவுத்ரி தொடர்ந்து ட்விட்டரில் சர்ச்சைக்கூறிய கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

பாக்.அமைச்சர் பவத் சவுத்ரி சர்ச்சை ட்வீட், Pakistan Minister Fawad Chaudhry blames india for srilanka cricketers opting out of pakistan series
பாக்.அமைச்சர் பவத் சவுத்ரி சர்ச்சை ட்வீட்!   |  Photo Credit: AP

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் சிலர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவத் சவுத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

2009-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த போது, பயங்கரவாத கும்பல் இலங்கை அணி மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இதில் பல வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பல முன்னணி சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது. பாகிஸ்தானின் ஹோம் போட்டிகள் அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐசிசி-யின் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களும் பாகிஸ்தானில் அதன் பிறகு நடைபெறவில்லை.      

இந்நிலையில் இலங்கை அணி பாகிஸ்தானில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் லசித் மலிங்கா, திசாரா பெரேரா, மேத்தியூஸ், சந்திமால், கருணரத்னே, சில்வா, தனன்ஜெயா, டிக்வெல்லா, குஷால் பெரேரா, லக்மல் என 10 வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் விளையாட மறுத்தனர். 

இதனை பற்றி பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவத் சவுத்ரி பதிவிட்ட ட்வீட்டில் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடினால் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுவார்கள் என இந்தியா அச்சுறுத்தியதாக கமெண்ட்டேடர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் மலிவான யுக்தி என்றும் விளையாட்டு முதல் விண்வெளி வரை இந்தியா மூர்க்ககுணத்துடன் செயல்படுவது கண்டணத்திற்கூறியது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய விளையாட்டு துறை அதிகாரிகள் செய்துள்ளது மிகவும் இழிவான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

 

சந்திராயன்-2 முதல் கிரிக்கெட் வரை இந்தியாவின் பல்வேறு  செயலபாடுகளை அவர் விமர்சித்து வருகிறார். மேலும் சில நாட்களுக்கு முன் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டபோது, இந்தியா 900 கோடி ரூபாய் வீணாக செலவளித்துள்ளது என்றும் அபிநந்தனை போன்ற முட்டாள்களை பாகிஸ்தானுக்கு டீ குடிக்க அனுப்ப வேண்டாம் என்றும் சர்ச்சைக்கூறிய கருத்தை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.     

 
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...