ஜனநாயகத்துக்கு புது விளக்கம் கொடுத்த ஓ.பி. ரவீந்திரநாத் குமார்

செய்திகள்
Updated Jul 10, 2019 | 16:40 IST | Times Now

மக்களவையில் பேசிய தேனி மக்களவை தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார், Democracy-க்கு பட்ஜெட்டோடு தொடர்புபடுத்தி விளக்கம் அளித்தது அவையில் இருந்தவர்களை வியப்படையச் செய்தது. 

OP Ravindranath Kumar
OP Ravindranath Kumar   |  Photo Credit: YouTube

டெல்லி: Democracy என்ற ஆங்கில வார்த்தையை மத்திய பட்ஜெட்டோடு பொருத்தி பார்த்து புது வித விளக்கம் கொடுத்துள்ளார் தேனி மக்களவை தொகுதி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் குமார்.

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து 2019-2020 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்து பேசினார். அப்போது வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் செய்வது குறித்தும் புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய 'யானை புக்க புலம் போல' என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். 

இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் திங்கட்கிழமை முதல் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றைய நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய பட்ஜெட்டால் ஏழை மக்களுக்கு பலனில்லை என்று கருத்து தெரிவித்தனர். 

அதேநேரம் தேனி மக்களவை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி. ரவீந்திரநாத் பட்ஜெட் குறித்து பேசினார். அப்போது 'Democracy' (ஜனநாயகம்) என்ற சொல்லில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விளக்கம் அளித்தார். 

D for Development Budget - வளர்ச்சிகான பட்ஜெட்

E for Enormous Budget - அருமையான பட்ஜெட்

M for Modernaisation Budget - நவீன பட்ஜெட்

O for Organized Budget - ஒருங்கிணைந்த பட்ஜெட்

C for Corruption free Budget - ஊழலற்ற பட்ஜெட்

 

 

R for Revolutionary Budget - புரட்சிகரமான பட்ஜெட்

A for Associated Budget - மக்களோடு தொடர்புடைய பட்ஜெட்

C for Cultural Budget and - கலாசார பட்ஜெட்

Y for Young Budget - இளம் தலைமுறைகளுக்கான பட்ஜெட்

இவ்வாறு அவர் பட்ஜெட்டோடு தொடர்புபடுத்தி விளக்கம் அளித்தது அவையில் இருந்தவர்களை வியப்படையச் செய்தது. 
 

NEXT STORY
ஜனநாயகத்துக்கு புது விளக்கம் கொடுத்த ஓ.பி. ரவீந்திரநாத் குமார் Description: மக்களவையில் பேசிய தேனி மக்களவை தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார், Democracy-க்கு பட்ஜெட்டோடு தொடர்புபடுத்தி விளக்கம் அளித்தது அவையில் இருந்தவர்களை வியப்படையச் செய்தது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola