பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு!

செய்திகள்
Updated Sep 22, 2019 | 19:32 IST | Times Now

பெரிய வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு
பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு  |  Photo Credit: Getty Images

பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் வியாபாரிகள் பதுக்கி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் மழை பெய்துவருவதால் வெங்காயத்தின் வரத்தும் இறக்குமதியும் குறைந்துள்ளதால் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஐம்பது ரூபாய்க்கு விற்று வந்த வெங்காயம் தற்போது 80 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. சென்னையில் இதன் விலை 60 ரூபாயாகும். தினமும் சமைக்கும் அத்தனை சமயல்களிலும் பெரியவெங்காயம் கண்டிப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் மத்திய அரசு விலை உயர்வை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மேலும் வியாபாரிகள் விலை உயர்வு காரணமாக  வெங்காயத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வெங்காயங்களை குறைக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்றுமதிக்கு கொடுக்கப்படும் சலுகைகளைக் குறைக்கும் பட்சத்தில் ஏற்றுமதி குறைந்து நாட்டில் வெங்காயத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEXT STORY