துலாபாரத்தின் இரும்புக் கொக்கி அறுந்து விழுந்ததில் சசிதரூர் தலையில் படுகாயம்!

செய்திகள்
Updated Apr 15, 2019 | 14:47 IST | Times Now

துலாபாரம் கொடுக்கும் தராசு தட்டுகளில் ஒருபக்கம் வாழைப்பழங்களை அடுக்கிவிட்டு, மற்றொரு தட்டில் சசி தரூர் அமரவைக்கப்பட்டார்.

shashi tharoor, சசி தரூர்
துலாபாரம் கொடுக்கும் சசி தரூர்  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: கேரளாவில் துலாபாரம் செலுத்திய மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூரின் தலையில் துலாபார தராசின் கொக்கி அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்தார்.

கேரள மாநிலம் முழுவதும் இன்று ‘விஷூ’ எனப்படும் கேரளப் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

விஷூவை முன்னிட்டு இன்று திருவனந்தபுரம் எம்.பியும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர், திருவனந்தபுரம், தம்பானூரில் அமைந்துள்ள கந்தாரி அம்மன் தேவி கோவிலில் தனது எடைக்கு எடை நிகரான வாழைப்பழங்களை துலாபாரம் மூலமாக செலுத்த வந்திருந்தார்.

துலாபாரம் கொடுக்கும் தராசு தட்டுகளில் ஒருபக்கம் வாழைப்பழங்களை அடுக்கிவிட்டு, மற்றொரு தட்டில் சசி தரூர் அமரவைக்கப்பட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமாக இரும்புக் கொக்கி சசி தரூரில் தலையின் மீது வேகமாக விழுந்தது. 

எதிர்பாராமல் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சசிதரூர் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தார். தலையில் இருந்து அவருக்கு வேகமாக ரத்தம் வெளியேறியது.

இதனையடுத்து, ரத்தப்போக்கிற்கு முதலுதவி அளித்து அவரை உறவினர்களும், காங்கிரஸ் கட்சியினரும் உடனடியாக திருவனந்தபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அவரது தலையில் கொக்கி விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு ஆறு தையல்கள் போடப்பட்டதாகவும், காலிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், வேறெந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை, அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் எம்.பியாக இரண்டு முறை வெற்றிபெற்றுள்ள சசி தரூர், இந்த முறையும் இதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
துலாபாரத்தின் இரும்புக் கொக்கி அறுந்து விழுந்ததில் சசிதரூர் தலையில் படுகாயம்! Description: துலாபாரம் கொடுக்கும் தராசு தட்டுகளில் ஒருபக்கம் வாழைப்பழங்களை அடுக்கிவிட்டு, மற்றொரு தட்டில் சசி தரூர் அமரவைக்கப்பட்டார்.
Loading...
Loading...
Loading...