மக்களவையில்’வந்தே மாதரம்’...’ஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமார்: பாஜக உற்சாக வரவேற்பு!

செய்திகள்
Updated Jun 18, 2019 | 17:29 IST | Times Now

மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பின்போது, தேனி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுகவைச் சேர்ந்த ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

ஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்தரநாத் குமார்
ஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்தரநாத் குமார்  |  Photo Credit: Twitter

புதுடெல்லி: மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பின்போது, தேனி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுகவைச் சேர்ந்த ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். அப்போது பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

17 வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தற்காலிய வீரேந்திர குமார் சபாநாயகர் இன்று 2-வது நாளாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல் நாளான நேற்று 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 38 பேர் உள்பட மற்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

முதலில் திமுக வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கனிமொழி உள்ளிட்ட திமுக மக்களவை உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் தமிழலேயே பதவியேற்றுக் கொண்டனர். 

இவர்களில் சிலர் பதவியேற்கும்போது தமிழ் வாழ்க, திராவிடம் வாழ்க, பெரியார் வாழ்க எனக் கூறினர். இவர்களைத் தொடர்ந்து தேனி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுக வைச் சேர்ந்த ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். பின்னர், இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பி.ரவீந்திரநாத் குமார், இன்று டெல்லியில் ஒலிக்கும் தமிழகத்தின் ஒப்பற்ற குரல் ப.ரவீந்திரநாத் குமார். இன்றை குரல், நாளைய புதிய விடியல் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டபின், வாழ்க தமிழ், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,  வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறினார் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். அப்போது, சபையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

NEXT STORY
மக்களவையில்’வந்தே மாதரம்’...’ஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமார்: பாஜக உற்சாக வரவேற்பு! Description: மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பின்போது, தேனி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுகவைச் சேர்ந்த ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles