வேதியியலில் நோபல் பரிசு: லித்தியம் பேட்டரி விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

செய்திகள்
Updated Oct 09, 2019 | 16:15 IST | Times Now

லித்தியம் மின்கலன் மேம்பாட்டில் பங்காற்றியதற்காக 2019-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Laureates in Chemistry 2019, வேதியியலில் 2019-ன் நோபல் பரிசு வென்றவர்கள்
வேதியியலில் 2019-ன் நோபல் பரிசு வென்றவர்கள்  |  Photo Credit: Twitter

ஸ்வீடன்: 2019-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு ஜான் பி.குட்டினஃப், எம்.ஸ்டான்லி விட்டிங்கம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. லித்தியம் மின்கலன் மேம்பாட்டில் பங்காற்றியதற்காக 2019-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலம் எடை குறைவானதாக இருப்பதுடன் ரீசார்ஜ் ஆகும் தன்மை கொண்டதாகும். சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை சேமித்து வைக்கும் தன்மை கொண்டதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு லித்தியம்-அயன் பேட்டரிகள் உதவுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஜான் பி.குட்டினஃப், பிங்கம்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஸ்டான்லி விட்டிங்கம், ஜப்பான் நாட்டின் மெய்ஜோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.12.56 லட்சம் மதிப்புள்ள பரிசுத்தொகை மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

 

 

1991-ல் சந்தைக்கு வந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் நமது வாழ்வின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. தகவல்கள் தேடவும், தொடர்புகொள்ளவும், படிக்கவும், பணி செய்யவும், பயணம் செய்யவும், பாடல்கள் கேட்கவும் நாம் பயன்படுத்தும் கருவிகளில் லித்தியம்-ஐயான் பேட்டரிகள் பயன்படுகின்றன.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...