ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என் மீது குற்றச்சாட்டு இல்லை: ப.சிதம்பரம் பேட்டி

செய்திகள்
Updated Aug 21, 2019 | 21:30 IST | Times Now

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 24 மணிநேரத்துக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

 P Chidambaram meets press in delhi
P Chidambaram meets press in delhi  |  Photo Credit: ANI

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில்  என் மீது குற்றம் சாட்டப்படவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு 8.15 மணிக்கு டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் என் மீதும் என்னுடைய குடும்பத்தினர் மீதும் எந்த தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. போட்ட எப்.ஐ.ஆரிலும்  கூட என்னுடைய பெயர் இல்லை. இந்த வழக்கில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். 7 மாதங்களுக்கு பிறகு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் என்னுடைய முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையடுத்து நேற்று இரவு முழுவதும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அதற்குள் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. நான் எங்கும் தப்பி ஓடவில்லை. தொடர்ந்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன். ஜனநாயகம், சுதந்திரத்தில்  நம்பிக்கை கொண்டுள்ளேன். அரசியல் சட்டப்பிரிவு 21 குடிமகனின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தலை வணங்குகிறேன். சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம். எனக்கு எதிராக பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...