'என்ன பொண்ணோட ஆதார் கார்டில் நோ சாதியா? கல்யாணம் கேன்சல்’-ஆந்திராவில் அதிர்ச்சி!

செய்திகள்
Updated Jun 25, 2019 | 16:45 IST | Times Now

மணமகள் கொடுத்த ஆதார் அட்டையில் மணமகளின் தந்தை பெயருக்கு பின்புறம் அவர்களது சாதி பெயர் இடம்பெறவில்லையாம்.

Andhra, ஆந்திரா
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் திருமணம் நிச்சயமான நிலையில் மணமகளின் ஆதார் கார்டில் சாதி பெயர் இல்லை என்று நடக்க இருந்த திருமணத்தையே மணமகன் வீட்டார் நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர், பெடகாகனியில் உள்ள கோயில் ஒன்றில் திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு முன்பாக அதனைப் பதிவு செய்ய மணமக்களின் ஆதார் கார்டுகளை கேட்டுள்ளார் கோயில் அர்ச்சகர் கேட்டுள்ளார்.

அப்போது, மணமகள் கொடுத்த ஆதார் அட்டையில் மணமகளின் தந்தை பெயருக்கு பின்புறம் அவர்களது சாதி பெயர் இடம்பெறவில்லையாம். இதனால், சாதியை சொல்லாமல் ஏமாற்றி திருமணம் செய்வதாக சந்தேகத்துடன் கேட்ட மணமகன் வீட்டார் ஆதார் கார்டில் சாதி இடம்பெறாதது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், சாதி பெயரை தங்கள் பேருக்கு பின்னால் சேர்க்கும் வழக்கம் இல்லை என்று மணமகள் வீட்டார் விளக்கமளித்தனர். ஆனால், அதனை ஏற்காத மணமகன் குடும்பத்தினர் மணமகளின் சொந்த ஊர் மக்களிடமும் விசாரித்துள்ளனர். அவர்களும் அதையே சொல்லியுள்ளனர். எனினும், இதை ஏற்காத மணமகன் குடும்பம் திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியது. 

இதனையடுத்து காவல்நிலையத்தில் மணமகள் வீட்டார் சார்பில், மணமகன் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
'என்ன பொண்ணோட ஆதார் கார்டில் நோ சாதியா? கல்யாணம் கேன்சல்’-ஆந்திராவில் அதிர்ச்சி! Description: மணமகள் கொடுத்த ஆதார் அட்டையில் மணமகளின் தந்தை பெயருக்கு பின்புறம் அவர்களது சாதி பெயர் இடம்பெறவில்லையாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola