காரில் பறந்து வந்து விழுந்த கடிதம்; நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை!

செய்திகள்
Updated Aug 13, 2019 | 15:08 IST | Times Now

நிர்மலா சீதாராமனின் காரில் பெண் ஒருவர் கடிதம் ஒன்றை சுருட்டி வீச, அவர் அருகில் சென்று விசாரித்து அவரது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.

Nirmala Sitharaman
நிர்மலா சீதாராமன்  |  Photo Credit: Twitter

கர்நாடகா: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரில் பெண் ஒருவர் கடிதம் ஒன்றை சுருட்டி வீச, அவர் அருகில் சென்று விசாரித்து அவரது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.  

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளும் வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது பெண் ஒருவர், கடிதம் ஒன்றை சுருட்டி காரில் வீசியுள்ளார். அந்த கடிதத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அந்த பெண்ணின் அருகில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி, பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவருக்கு உடனடியாக வீடு கட்டி தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் அந்த பெண்மணி காரில் வீசிய கடிதத்தை அவர் கையாலேயே சம்பந்தப்பட்டு அதிகாரியிடம் ஒப்படைக்கவும் வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரல் ஆகி வருகிறது. 

 

 

நிர்மலா சீதாராமனனின் இந்த செயல் வெகுவும் பாராட்டப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்ககூறியதற்கும், அவரது இந்த செயலுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தற்போது தெரிவித்து வருகின்றனர்.      

NEXT STORY
காரில் பறந்து வந்து விழுந்த கடிதம்; நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை! Description: நிர்மலா சீதாராமனின் காரில் பெண் ஒருவர் கடிதம் ஒன்றை சுருட்டி வீச, அவர் அருகில் சென்று விசாரித்து அவரது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...