யாருக்கும் இது நடக்கூடாது: திருமணமான 5 நிமிடத்துக்குள் பலியான தம்பதி

செய்திகள்
Updated Aug 25, 2019 | 15:07 IST | Times Now

திருமணமான 5 நிமிடத்திலேயே புதுமணத் தம்பதி விபத்தில் இறந்த செய்தி அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் பரவி வருகிறது. 

Harley Morgan with Boudreaux Morgan
Harley Morgan with Boudreaux Morgan  |  Photo Credit: Twitter

வெள்ளிக்கிழமை டெக்ஸாசில் திருமணம் செய்துகொண்ட ஜோடி அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்தில் பலியான நிகழ்வு நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

சிறு வயதில் இருந்தே காதலர்களாக இருந்துள்ளனர் ஹர்லே ஜோ மார்கனும், பவுட்ரியாக்ஸ் மார்கனும். டெக்ஸாஸ், விடோரில் வசித்து வரும் 19 வயதான ஹர்லே மார்கன் அதே பகுதியைச் சேர்ந்த தனது 20 வயது தோழியான பவுட்ரியாக்ஸை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, இந்த வெள்ளிக்கிழமை, அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

நண்பர்கள், பெற்றோர் சூழ திருமணம் முடிந்து, ஹர்லே மார்கனும் பவுட்ரியாக்ஸும் தங்களது செவ்ரொலெட் காரில் ஏறி அமர, கண்ணிமைக்கும் நேரத்தில் ஃபோர்டு ட்ரக் வந்து அவர்களது காரி மோதியது. தங்களது நண்பர்கள் பெற்றோர்கள் கண்ணெதிரே காரில் தூக்கி எறியப்பட்டனர். கார் சுக்குநூறாக நொறுங்க, சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹார்லேவின் அம்மா இது பற்றிக் கூறும்போது அவர்கள் திருமணம் ஆகி 5 நிமிடம் கூட உயிரோடு இருக்கவில்லை. என் கண் முன்னாலேயே என் மகன் இறந்தது எனது வாழ்வின் சாபம். இனி நான் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் என்ன இது உலுக்கவே செய்யும். ஒரு இரவு கூட என்னால் இனி உறங்கவே முடியாது என்று அவர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. 

இந்த ஜோடி வரும் டிசம்பர் 20ஆம் தேதி விமரிசையாக தங்களது திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்படி திருமணமான 5 நிமிடத்திலேயே புதுமணத் தம்பதி விபத்தில் இறந்த செய்தி அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் பரவி வருகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...