மணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்!

செய்திகள்
Updated Apr 18, 2019 | 12:59 IST | Times Now

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதியினர் சிலரும் மணக்கோலத்தில் வாக்களித்தனர்.

மணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்
மணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்  |  Photo Credit: Twitter

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் அருகே புதுமணத் தம்பதி, மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளது. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் ஆர்வமுடன் வாக்களித்துள்னர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்புயானயாக்கர் பட்டியைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் பிரியாவுக்கு இன்று நிச்சயம் செய்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தபின், சுபாஷ்- பிரியா தம்பதி மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்குச் சென்றனர். சுபாஷ் பாரம்பரிய வெள்ளை வேட்டிச் சட்டையுடனும், பிரியா பட்டுச் சேலையுடனும் கழுத்தில் மாலையுடன் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

இதேபோல்,ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் புதுமணத் தம்பதியினர், திருமண ஆடையுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

 

 

இந்த தம்பதி வாக்களிக்க வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

NEXT STORY
மணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்! Description: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதியினர் சிலரும் மணக்கோலத்தில் வாக்களித்தனர்.
Loading...
Loading...
Loading...