ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் மீண்டும் ஆட்சிமைக்கிறது!

செய்திகள்
Updated May 23, 2019 | 19:07 IST | Times Now

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் மீண்டும் ஆட்சிமைக்கிறது

ஒடிசாவில் மீண்டும் பிஜூ ஜனதாதளம் ஆட்சி
ஒடிசாவில் மீண்டும் பிஜூ ஜனதாதளம் ஆட்சி  |  Photo Credit: Times Now

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சி 101 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் 21 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒடிசாவில் இந்த முறை ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பல்வேறு மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன.

இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்தபோது, பிஜூ ஜனதாதளம் கட்சி பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. இறுதியில் 21 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 6இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

 

NEXT STORY
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் மீண்டும் ஆட்சிமைக்கிறது! Description: ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் மீண்டும் ஆட்சிமைக்கிறது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles