சந்திராயன்-2 அப்டேட்: விக்ரம் லேண்டருக்கு ஹலோ சிக்னல் அனுப்பியது நாசா!

செய்திகள்
Updated Sep 12, 2019 | 15:37 IST | Times Now

இஸ்ரோவுக்கு உதவும் வகையில் லேண்டர் விக்ரமுடன் தொடர்பு ஏற்படுத்த நாசா ஹலோ சிக்னல் அனுப்பியுள்ளது.  

விக்ரம் லேண்டருக்கு ஹலோ சிக்னல் அனுப்பியது நாசா, NASA sends hello signal to vikram lander
விக்ரம் லேண்டருக்கு ஹலோ சிக்னல் அனுப்பியது நாசா  |  Photo Credit: Twitter

நிலவில் உள்ள லேண்டர் விக்ரமுடன் இஸ்ரோ தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்துவரும் நிலையில்,  இஸ்ரோவுக்கு உதவும் வகையில் நாசாவும் லேண்டருக்கு ஹலோ சிக்னல் அனுப்பியுள்ளது.  

சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் தரையிறங்கும் போது, நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் திடீரென தொடர்பை இழந்தது. பின்னர் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விக்ரம் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள லேண்டர் விக்ரம் சாய்ந்த நிலையில் உடையாமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரோ தொடர்ந்து லேண்டர் விக்ரமுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது நாசாவும் இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் ஒப்புதலை பெற்று நாசா லேண்டர் விக்ரமுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. நாசா கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் தனக்கு சொந்தமான ஆய்வு நிலையங்களில் உள்ள ஆன்டெனாவில்  இருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் ஹலோ சிக்னல் அனுப்பியுள்ளது. ஒரே நேரத்தில் பல செயற்கைகோள்களுடன் ரேடியோ வாயிலாக தொடர்பு கொள்ளும் வசதியும் இங்கு உள்ளது. பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணிக்க நாசாவின் லேசர் ரிப்ளெக்டர் விக்ரமுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சிக்னல்களுக்கு விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள நாசா சார்பில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 1 நிலவு தினம், அதாவது பூமியில் 14 நாட்கள். எனவே நேரம் மிக குறைவாக இருப்பதால் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ சார்பிலும் நாசா சார்பிலும் தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.     
  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...