சந்திராயன்-2 அப்டேட்: விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை ஆராய்கிறது நாசா!

செய்திகள்
Updated Sep 19, 2019 | 13:03 IST | Times Now

நாசாவுக்கு சொந்தமான  எல்.ஆர்.ஓ, விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தற்போது நாசா விஞ்சானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை ஆராய்கிறது நாசா,NASA analysing images of lander vikram captured by LRO
விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை ஆராய்கிறது நாசா  |  Photo Credit: IANS

நியூயார்க்: நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்ததை தொடர்ந்து, தற்போது அந்த புகைப்படங்ளை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் சாப்ட் லேண்டிங் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்றபோது, நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்தது. அதனை தொடர்ந்து சந்திராயன்-2 ஆர்பிட்டர் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. திட்டமிட்டபடி தரையிறங்க முடியாவிட்டாலும் லேண்டருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் இஸ்ரோவுக்கு உதவும் வகையில் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசாவும் இடுப்பட்டது. தனக்கு சொந்தமான ஆய்வு நிலையங்களில் உள்ள ஆன்டெனாவில்  இருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் லேண்டருக்கு ஹலோ சிக்னல் அனுப்பியது. இருப்பினும் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நாசாவுக்கு சொந்தமான  எல்.ஆர்.ஓ (Lunar Reconnaissance Orbiter) விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணிக்கும் போது புகைப்படங்கள் எடுத்துள்ளது. ஆர்பிட்டர் அப்பகுதியில் பயணித்தபோது அங்கு சூரிய ஒளி குறைவாக இருந்துள்ளது. இதனால் புகைப்படங்கள் தெளிவாக வரவில்லை. இருப்பினும் அந்த புகைப்படங்களை தற்போது நாசா விஞ்சானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். விரைவில் புகைப்படங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிடவுள்ளனர். நாசாவின் ஆர்பிட்டரானது மீண்டும் லேண்டர் உள்ள பகுதியில் அக்டோபர் 14-ஆம் தேதி பயணிக்கும் போது புகைப்படம் எடுக்கவுள்ளது. 

லேண்டர் விக்ரமின் ஆயுட்காலம் ஒரு நிலவு தினம், அதாவது பூமியின் படி வெறும் 14 நாட்கள் மட்டும் தான். அதனால் நாளை வரை மட்டுமே லேண்டர் செயல்படும். அதன் பிறகு தென் துருவத்தில் வெப்ப நிலை குறையும் காரணத்தால், லேண்டரின் எலக்ட்ரானிக் பாகங்கள் செயலிழந்துவிடும்.      

NEXT STORY