ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர்

செய்திகள்
Updated May 25, 2019 | 23:21 IST | Times Now

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

Narendra Modi meets President Ram Nath Kovind
Narendra Modi meets President Ram Nath Kovind  |  Photo Credit: Twitter

டெல்லி: மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் சனிக்கிழை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்ய மோடி பெயர் முன்மொழியப்பட்டது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மோடியின் பெயரை முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஒருமனதாக மோடி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும், மக்களவை குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் பாதங்களை தொட்டு வணங்கிணார். இந்தக் கூட்டத்தில் அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல்,  சிவசேன தலைவர் உத்தவ் தாக்கரே, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Narendra Modi meets President Ram Nath Kovind

இந்த கூட்டம் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி. அதனை ஏற்று மோடியை ஆட்சியமைக்க வரும்படி குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று மே 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரை சந்தித்த போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதின்கட்கரி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதிஷ்குமார், பிரகாஷ் சிங் பாதல் மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.


 

NEXT STORY
ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் Description: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
Loading...
Loading...
Loading...