நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி பெறவில்லை - ஆர்டிஐ

செய்திகள்
Updated May 16, 2019 | 10:07 IST | Times Now

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை 5 பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் சஞ்சய் தத்
நடிகர் சஞ்சய் தத்  |  Photo Credit: Twitter

மும்பை: பிரபல நடிகர் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த 1993-ம் ஆண்டு வர்த்தக தலைநகரான மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழந்தன. இதில் 257 பேர் பலியாகினர். 2000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.  இந்த சம்பவத்தின் போது துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்து உதவி செய்ததாக பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிராக புகார் எழுந்தது.  இந்த வழக்கில் கைதாகி குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் கருணை அடிப்படையில் 5 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது.

இருப்பினும் சிறையில் தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்பே நன்னடத்தை அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் தத் மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஏரவாட சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் விடுதலை குறித்து மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மகராஷ்டிர அரசு மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை எனவும் பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

NEXT STORY
நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி பெறவில்லை - ஆர்டிஐ Description: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை 5 பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது.
Loading...
Loading...
Loading...