மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

செய்திகள்
Updated Aug 24, 2019 | 15:57 IST | Times Now

மும்பை அருகே பிவாண்டி நகரில்   அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் சிக்கி கொண்டனர்.

Mumbai building collapse
Mumbai building collapse  |  Photo Credit: ANI

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பிவாண்டி நகரில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி மாநகர ஆணையாளர் அசோக் ரங்காம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக எங்களுடைய அவசரகால குழு ஒன்று அங்கு சென்று ஆய்வு செய்தது. இதில் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது தெரியவந்தது. 8 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதும், கட்டிடம் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அதனால் கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றினோம். ஆனால், சிலர் அனுமதியின்றி கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதன் பின்பே அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

 

 

 

இதுவரை 4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து விசாரண மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...