மத்திய பிரதேசத்தில் மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து!

செய்திகள்
Updated Sep 12, 2019 | 17:33 IST | Times Now

போபால் நகரில் மழை பெய்ய வேண்டி கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரண்டு தவளைகளுக்கு ஊர் மக்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் தவளைகளுக்கு விவாகரத்து செய்யப்பட்டது.

Frogs divorced following heavy rains in Bhopal, மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து
மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து  |  Photo Credit: ANI

போபால்: கனமழை பெய்வதை நிறுத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்யும் சடங்கு மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அரங்கேறியது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் மழை வேண்டி இவ்விரு தவளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த போபால் நகரில் மழை பெய்ய வேண்டி கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரண்டு தவளைகளுக்கு ஊர் மக்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் போபால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, மழை நிற்க வேண்டி தற்போது இத்தவளைகளுக்கு விவாகரத்து செய்யப்பட்டது.

புதன்கிழமை மாலை நடைபெற்ற இச்சடங்கில் ஓம் சிவ சேவா சக்தி மண்டல் அமைப்பினர் மந்திரங்கள் ஓதி தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்தனர். திருமணம் ஆன அதே தவளைகளை மீண்டும் தேட முடியாது என்பதால் தவளை பொம்மைகளை வைத்து இந்த சடங்கு நிறைவேற்றப்பட்டது.

புதன்கிழமை பெய்த கனமழையில் போபால் நகரை வெள்ளம் சூழ்ந்தது. பருவமழை தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட 28 சதவீதம் கூடுதலாக மத்திய பிரதேச மாநிலத்தில் மழை பெய்துள்ளது. அடுத்த 3-4 நாட்களுக்கு மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் நர்மதா நதி அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...