இந்தியாவில் இந்தவருடம் 96% பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

செய்திகள்
Updated Apr 15, 2019 | 23:46 IST | Times Now

இந்திய வானிலை ஆய்வு மையம் இம்முறை 96% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain, மழை
பருவமழை அளவு  |  Photo Credit: Getty Images

டெல்லி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இயல்பான அளவில் பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு வருடமும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். இதன்காரணமாக மட்டுமே இந்தியாவிற்கு மொத்த மழையில் 70% மழையளவு கிடைக்கிறது. 

இதனால், தென்மேற்கு பருவமழையே விவசாயம் செழிப்பாக நடப்பதற்கான காலகட்டமாகவும் இருக்கிறது. ஆனால், சில தனியார் வானிலை ஆய்வு மையங்கள் இந்தவருடம் பருவமழையானது வழக்கத்துக்கு மாறாக சற்று குறைவான அளவிலேயே பொழியும் என்று தெரிவித்திருந்தன. 

Rain

இந்நிலையில், இந்தவருடம் ஜூன் - செப்டம்பர் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்யும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும், இம்முறை 96% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5% அளவிற்கு கூடவோ, குறையவோ செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ‘எல் நினோ’வால் பருவமழை காலகட்டத்தின் இறுதியில் வலுகுறையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
இந்தியாவில் இந்தவருடம் 96% பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்! Description: இந்திய வானிலை ஆய்வு மையம் இம்முறை 96% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...