தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!

செய்திகள்
Updated May 15, 2019 | 11:50 IST | Times News Network

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் 4 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை ஜூன் 4 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு  |  Photo Credit: PTI

புதுடெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தனியார் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இந்தியாவின் 4 மண்டலங்களிலும் சராசரிக்கு சற்றுக் குறைவான மழை அளவு பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மற்றும் தீபகற்ப பகுதியில் ஒரளவு அதிகமாக 96 சதவிகிதம் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மத்தியப் பகுதியில் 9 சதவிகிதம் வரை மழைப் பொழிவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்கி, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய 40 முதல் 45 நாட்கள் வரை ஆகலாம் என்றும், மேற்கு ராஜஸ்தானில் வழக்கம்போல கடைசியாக பருவமழை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பருவமழை தொடக்கத்தில் சற்று விட்டு விட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், தீபகற்ப இந்தியாவில் மழைப்பொழிவு தொடங்குவதற்கு சற்று காலதாமதம் ஏற்படலாம் என்றும் ஸ்கைமெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜிதின் சிங் தெரிவித்துள்ளார். 
 

NEXT STORY
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு! Description: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...
Loading...
Loading...