மோடியைவிட தேவ கவுடா சிறந்த பிரதமர் - கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

செய்திகள்
Updated Apr 20, 2019 | 15:37 IST | Times Now

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட எனது தந்தை தேவ கவுடா சிறந்த பிரதமராக செயல்பட்டார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 Karnataka Chief Minister HD Kumaraswamy, கர்நாடக முதல்வர் குமாரசாமி
கர்நாடக முதல்வர் குமாரசாமி  |  Photo Credit: ANI

பெங்களூர்:   தற்போது பிரதமர் அலுவலகத்தை மோடி தவறாக பயன்படுத்தி வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

எனது தந்தை தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்," எனது தந்தை தேவ கவுடா பிரதமராக இருந்த 10 மாதக் காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத் தாக்குதல் கூட நடைபெறவில்லை. ஒட்டு மொத்த தேசமும் அந்த நேரத்தில் அமைதியாக இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அக்கறை செலுத்தினார். மோடியின் இந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் நடந்ததையும் தேவகவுடா ஆட்சி காலத்தில் நடந்ததையும் ஆவணங்கள் மூலம் பார்த்தாலே உண்மை புரியும். 

இந்த நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளனர். பலமுறை இந்தியா, பாகிஸ்தான் போர்கள் நடந்துள்ளன. எந்த பிரதமரும் இந்த விவகாரத்தில் ஆதாயம் தேடியது இல்லை. ஆனால், பிரதமர் மோடி ஆதாயம் தேடுகிறார். தற்போது பிரதமர் அலுவலகத்தை மோடி தவறாக பயன்படுத்தி வருகிறார். அதன் மூலம் தன்னை அவர் பாதுகாத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேவ கவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
மோடியைவிட தேவ கவுடா சிறந்த பிரதமர் - கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி Description: தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட எனது தந்தை தேவ கவுடா சிறந்த பிரதமராக செயல்பட்டார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...