மிகப்பெரிய வெற்றிக்குப்பின் அத்வானியை சந்தித்த மோடி, அமித்ஷா!

செய்திகள்
Updated May 24, 2019 | 12:52 IST | Times Now

பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவரான அத்வானியை, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இன்று சந்தித்தனர்

அத்வானியை சந்தித்த மோடி, அமித்ஷா
அத்வானியை சந்தித்த மோடி, அமித்ஷா  |  Photo Credit: ANI

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவரான அத்வானியை, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இன்று சந்தித்தனர்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனித்து 302 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஒரு தொகுதியில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று காலை கட்சியின் மூத்த தலைவரான அத்வானியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி இன்று பெற்றுள்ள வெற்றிக்கு காரணம், அத்வானி போன்ற மிகப்பெரிய தலைவர்கள் பல ஆண்டுகளாக கட்சியை வளர்த்ததே என்று தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியொர் சந்தித்தனர். பின்னர் பேசிய மோடி, முரளி மனோகர் ஜோஷி, மிகப்பெரிய அறிவாளி என்றும், கல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானது என்று தெரிவித்தார். தான் உட்பட பல பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை வளர்ப்பதற்காக அவரது தொடர்ந்து பாடுபட்டதாகவும் மோடி தெரிவித்தார். எனவே, அவரது ஆசிர்வாதங்களைப் பெற வந்த தாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

NEXT STORY
மிகப்பெரிய வெற்றிக்குப்பின் அத்வானியை சந்தித்த மோடி, அமித்ஷா! Description: பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவரான அத்வானியை, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இன்று சந்தித்தனர்
Loading...
Loading...
Loading...